Thursday, December 12, 2013

இனிக்கும் விஷம் - ( SWEET POISON )

கையில் கனியிருக்க காய் உண்பார் உண்டோ ? உடலுக்கு நல்லது பயக்கும் உணவுகள் இருக்கும்போது நாம் தீது விளைவிக்கும் பொருள்களையே உண்டு நோயை தேடிக்கொள்கிறோம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருளான வெள்ளை சர்க்கரையின் கொடுமையான விளைவுகளை காண்போம். அதன் கொடுமைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும்.
வெள்ளை சர்க்கரையும், மனமும்
புள்ளிவிவரப்படி சிறு வயதினிலேயே குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களில் 75 % பேர் அதிக அளவில் சர்க்கரையை உண்டவர்கள் என்று அமெரிக்க ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    
     வெள்ளை சர்க்கரையை உண்ணும் குழந்தைகள் மனதில் காழ்ப்புணர்ச்சியும்,கொடூர ரசனைகளும் வளரும் என்று ஆராய்ச்சியில் புலப்படுகின்றது.
இதயமும் வெள்ளை சர்க்கரையும்;
          “தையமின்  என்னும் Vit .B. குறைவு தான் அனைத்து இதய நோய்க்களுக்கும் காரணம் என்கிறது ஆராய்ச்சி. உணவில் Vit.B. குறைவில்லாமல் பார்ப்பது மிக அவசியம். ஆனால் உணவின் மூலம் உடலில் சேரும் Vit .B. சத்தினை மிக அதிக அளவில் திருடுவது யார் தெரியுமா? அந்த கயவன், திருடன் வெள்ளை சர்க்கரை தான். ஆம் சர்க்கரையை ஜீரணம் செய்ய  Vit.B. தேவைப்படுகிறது. ஆகையால், உணவு பாதையில் சேர்ந்து விடும் சர்க்கரையை ஜீரணம் செய்ய  தேவைப்படும்  Vit.B.யை உடல் Vit.B. யின் சேமிப்பு கிடங்குகளான (storage for Vit. B.) கல்லீரல், சிறுநீரகம், இருதயம்,
போன்ற உறுப்புகளிலிருந்து திருடப்பட்டு, சுரண்டப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதனால் தினமும் சர்க்கரை உண்டுவந்தால் Vit.B. பற்றாக்குறை ஏற்படுவது நிச்சயம்.இந்த பற்றாக்குறை நிச்சயமாக இருதய கோளாறுகளை கொணரும். நாம் வெள்ளை சர்க்கரை உண்பது தற்கொலைக்கு ஒப்பாகும்.
வெள்ளை சர்க்கரை =====> Vit.B பற்றாக்குறை =====> இருதய கோளாறு .
அன்பர்களே! இதற்கான மாற்று என்ன? நாம் வெள்ளை சர்க்கரையின் இனிப்பை தவிர்க்க வழியுண்டா ? உண்டு.
நமக்கு இனிப்பு தான் தேவை.அதனை தேன், கருப்பட்டி வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இதோ பிரம்மிக்க வைக்கும் ஓர் ஒப்பீடு

             Vit.B. வகைகள்
நாட்டு சர்க்கரை           (100 g)
வெள்ளை சர்க்கரை   (100 g)
 தையமின்        (Thiamin)
 ரிபோப்லையவின் (Riboflavin)
 நியாசின்          (Niacin)
 பைரிடோக்சின்    (Pyridoxine)
 பண்டோதேனிக் அமிலம் (Pantothenic Acid)
 பையோடின்       (Biotin)
         தாதுக்கள்
 கால்சியம்        (Calcium)
 பாஸ்பரஸ்       (Phosphorus)
 இரும்பு          (Iron)
 செம்பு           (Copper)
 மெக்னீசியம்     (Magnesium)
 குளோரின்       (chlorine)
 சோடியம்        (Sodium)
 பொட்டாசியம்    (Potassium)
 245M Mcg.
240 Mcg
 4 Mg.
270 Mcg.
260 Mcg.
16 Mcg


258 Mg
30 Mg
7.97 Mg.
1.93 Mg
.04 Mg.
317 Mg
90 Mg
1500 Mg..
0
0
0
0
0
0


1 Mg
0 Mg
.04 Mg
.02 Mg
0
0
3 Mg
5 Mg

மேலும் ஆர்த்ரைடீஸ்,ருமாடிசம். பல் சொத்தையாதல்,எலும்புகள் பலவீனப்படுதல் போன்ற கொடிய நோய்களுக்கும் சர்க்கரையே வழிவகுக்கிறது.
 நம் குடும்பத்தில் நம் குழந்தைகளுக்கு சர்க்கரையினை தினசரி கொடுத்துவிட்டு ஆரோக்கியத்தை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? 258 mg.  கால்சியம் சத்துள்ள வெல்லத்தை ஒதுக்கிவிட்டு வெறும் 1 Mg  கால்சியம் சத்துள்ள சர்க்கரையில் பானங்களை தயாரித்து கொடுத்துவிட்டு பிள்ளைகளுக்கு கால்சியம் மாத்திரைகளை தினமும் விழுங்க கொடுக்கும் அவல நிலை மாற வேண்டாமா?
    ஆகையால் இனிப்பு தேவை என்றால்  வெள்ளை சர்க்கரை வேண்டாம். இனியாகிலும் நல்ல உணவுகளான  தேன், கருப்பட்டி வெல்லம், நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு போன்ற இனிய இனிப்புகளை,ஆரோக்கியமான இனிப்புகளை பயன்படுத்துவோமாக.

நீர் சிகிச்சை

தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் பலன்களை போலவே இயற்கை மருத்துவத்தில் நீர் சிகிச்சை என்ற சிகிச்சை உள்ளது.ஐம்பூதங்களில் ஒன்றான நீரைக் கொண்டு பல விதமான நோய்களுக்கும் எடுத்துக்காட்டாக உடல் பருமன், தோல் நோய்கள் ,கருப்பை கோளாறுகள் மற்றும் மேற்சொன்ன அனைத்து நோய்களுக்கும் நீராவி குளியல்,இடுப்பு குளியல்,முதுகு தண்டு குளியல்,ஈரப்பட்டி போன்ற சிகிச்சை முறைகளின் மூலம் கண்டிப்பாக எவ்வித மருந்து மாத்திரைகளும் இல்லாமல் குணப்படுத்த முடியும்.

ஆரோக்கியமான உடல் நிலையே ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம். வாழ்க வளமுடன் .