Wednesday, November 20, 2013

இயற்கை மருத்துவம் ஒரு பார்வை

இயற்கை மருத்துவத்தின் முதல் மருந்து தண்ணீர்


மனிதனின் உடலில் 70 சதவிகிதம் நீர் தான் உள்ளது. இயற்கை மருத்துவர்களின் முதல் அறிவுரை ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தான் .என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்தும், என் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் அனுபவத்தில் இருந்தும் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பல பல நன்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

சாப்ட்வேர் மற்றும் உடல் உழைப்பு குறைவாக உள்ள அனைத்து துறைகளில் பணிபுரியும் பல நண்பர்கள் உள்ளாகும் முதல் மற்றும் மூல பிரச்சினை உடல் பருமன். உடல் உழைப்பு குறைவால் உடலில் கொழுப்பின் தேக்கம் அதிகமாகிறது.தண்ணீர் அதிகம் குடிப்பதனால் திசுக்களில் கொழுப்பு படிவதை தடுத்து உடம்பிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது .அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் பசியின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது மேலும் உடம்பின் அமிலத்தன்மையை நிலைபடுத்தி வைக்கிறது. அதனால் நண்பர்களே நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

உடம்பில் நீர் சத்து சமநிலையில் வைப்பதன் மூலம் தோல் பகுதியில் இருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன, தோல் வறட்சியின்றி மிருதுவாக புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதனால் தோல் நோய்களான எக்சிமா (eczema), psorpசொரியாசிஸ்(psoriasis) , தோல்சுருக்கம்(wrincles), கரும்புள்ளிகள்(spots) போன்றவையும் குணமாகும்.

மேலும் மூளையின் வேலை செய்யும் திறன் அதிகரிக்கிறது, நுரையீரல் சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கிறது, நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. 50% மாரடைப்பில் இருந்து பாதுகாக்கிறது ,நீர் சத்து குறைவினால் உண்டாகும் முதுகுவலி, தலைவலி குணமாகும். செரிமான சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு அளிக்கும். சிறுநீரக கற்கள் முதல் புற்று நோய் வரை அனைத்து வித நோய்களுக்கும் ஒரு அரு மருந்து “தண்ணீர் பருகுவது

2 comments:

  1. I agree to this. I regularly drink a lot of water and practising it for almost 3 years now. My health and body is in good shape because of the water.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete